October 25, 2021 3:32 am

என்.பி.எச்.எச் குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகளுக்கும் 5 கிலோ கொண்டை கடலை வழங்க கேட்டு வட்டவழங்கல் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு.

என்.பி.எச்.எச் குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகளுக்கும் 5 கிலோ கொண்டை கடலை வழங்க கேட்டு வட்டவழங்கல் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு.

இது சம்பந்தமாக குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ் குமரி எம். எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழகத்தில் தற்போது பொது விநியோகத் திட்டத்தின் கீழ்P.H.H, முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்கள், P.H.H.(AAY) முன்னுரிமை உள்ள அந்த்யோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள், N.P.H.H. முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்கள், N.P.H.H.(S) முன்னுரிமை அல்லாத சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், N.P.H.H.(NC) எப்பொருள் வோண்டாதோர் குடும்ப அட்டைதாரர்கள் என்ற 5 விதமான குறியீடுகள் கொண்ட மின்னணு குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது.

 

இந்நிலையில் கொரோனா பாதிப்பால், வறுமை கோட்டுக்கு கீழுள்ள மற்றும் முன்னுரிமை குடும்பங்களுக்கு, கொண்டைக்கடலை, நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. மத்திய அரசின், மத்திய தொகுப்பு திட்டத்தில், இருந்து கடந்த ஜூலை முதல், நவம்பர் வரை, 5 மாதங்களுக்கு, வரை உள்ள தலா ஒரு கிலோ வீதம், ரேஷன் கார்டுக்கு, மொத்தம் ஐந்து கிலோ கொண்டைக்கடலை வழங்க படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து பெறப்பட்டு, தமிழக அரசால் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கொண்டைக்கடலையைமொத்தமாக வினியோகிக்கிறது. அதனால், டிச., 1 முதல், பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில், கொண்டைக்கடலையை விலையின்றி வழங்கப்படுகிறது. ஆனால் ‘அந்தியோதயா அன்னயோஜனா – ஏ.ஏ.ஒய்.,’ மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்போர் ரேஷன் கார்டு -பி.எச்.எச்., ஆகிய குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகளுக்கு மட்டும், கொண்டைக்கடலை வழங்க, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் தேவை இல்லாத பிரச்சினைகள் ஏற்படுகிறது.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. அதில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 867 பேர் ஏ.ஏ.ஒய் மற்றும் பி.எச். எச். குறியீடுகளை கொண்டவையாகும். ஆனால் குமரி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால்
N.P.H.H குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகள் ஏழை மக்களிடம் தான் அதிகமனோரிடம் உள்ளது. இதனால் ஏராளமான கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்கள் பாதிக்கப்படுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கால் பலர் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
தற்போது ஏழை மக்கள் பயன்படுத்த வேண்டிய பி.எச். எச் குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகள் குமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பணக்கார்களிடம் தன் உள்ளது. என்.பி.எச்.எச். குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகளை மறு ஆய்வு செய்து ஏழை மக்களுக்கு பி.எச். எச். குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டையாக மாற்ற கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. மேலும் தற்போது கொண்டை கடலை வழங்குவதை பார்க்கும் போது மக்களை பிரித்து வைத்து உணவு பொருள் வழங்கும் முறையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆகவே தமிழக அரசு அனைத்து N.P.H.H குடும்ப அட்டை தாரர்களுக்கும் பாகுபாடு பார்க்காமல் ஏ.ஏ.ஒய்., P.H.H. குறியீடு கொண்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதை போன்று அனைத்து N.P.H.H குடும்ப அட்டை தாரர்களுக்கும் எவ்வித பாகுபாடும் பார்க்காமல் 5 கிலோ கொண்டை கடலை வழங்க உடனடியாக தமிழக அரசு உத்தரவிட வேண்டும். என்.பி.எச்.எச். குறியீடுகளை கொண்ட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 5 கிலோ கொண்டை கடலை வழங்க கேட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 7-12-2020 திங்கட்கிழமை நாளை காலை கிள்ளியூர், விளவங்கோடு, கல்குளம், திருவட்டார் ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணிக்கு உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். கிள்ளியூர் தாலுகா வட்டவழங்கல் அலுவலகத்தில் எனது தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். கல்குளம் தாலுகா வட்டவழங்கல் அலுவலகத்தில் பிரின்ஸ் எம். எல்.ஏ. தலைமையிலும், திருவட்டார், விளவங்கோடு வட்ட வளங்கல் அலுவலங்களில் நடை பெறும் உள்ளிரிப்பு போராட்டத்தில் அந்தந்த வட்டார நகர தலைவர்கள் தலைமையிலும் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இவ்வாறு ராஜேஷ் குமார் எம். எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

 

ஏழை மக்களிடம் உள்ள என்.பி.எச்.எச். குறியீடுகளை கொண்ட குடும்ப அட்டை களை பி.எச்.எச். குறியீடுகளை கொண்ட குடும்ப அட்டைகளாக மாற்ற ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. 2-07-2018 அன்று சட்டமன்றத்தில் குரல்…

குமரி மாவட்டத்தில் கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்களுக்குதான் என்.பி.எச். எச் குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகள் வழங்கபட்டுள்ளது. இதனால் ஏராளமான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்றும் அந்த குறியீடுகளை மாற்ற வேண்டும் என்று கடந்த 2-7-2018 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் கேள்வி எழுப்பிய போது உணவு துறை அமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைகளில் எந்தவித குறியீடுகள் இருந்தாலும் அனைத்து பொருட்களும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும் என்று உறுதி கூறினார். ஆனால் இன்று கொண்டை கடலை வழங்குவதை பார்த்தால் சட்டமன்றத்தில் அமைச்சர் சென்ன உறுதிபடி வழங்கப்படவிலை என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை மக்களை புறக்கணிக்கும் இந்த செயலை உடனடியாக தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page