எல்லை பாதுகாப்பு வீரரை தாக்கியதாக மனைவி  மற்றும்  உறவினர்கள் வழக்கு பதிவு .

குமரி மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு வீரரை தாக்கியதாக மனைவி  மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவாகிியுள்ளது.

          .நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(33).  ஆவடியில்  சி ஆர் இ எப் வீரராக பணிபுரியம் இவர் புதுக்கடை  அருகேயுள்ள பனங்கால்முக்கு  பகுதியில்  இருந்து சுமிதா என்பவரை  திருமணம்  செய்துள்ளார்.
        கடந்த 12-ம்  தேதி மாலை மகேஷ்  தனது  மனைவி வீட்டிற்கு  சென்றுள்ளார். அப்போது  ஏற்பட்ட  தகராறில் உறவினர்களான சுஜின், சிமி, புஷ்பலீலா மற்றும் மனைவி சுமிதா ஆகியோர் மகேஷை கெட்ட வார்த்தைகள் பேசி  தாக்கியதாகவும்,  கொலைமிரட்டல்  விடுத்ததாகவும் தெரிகிறது. இதில்  காயம் அடைந்த அவர்  குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    இது  தொடர்பான புகாரின்  பேரில் புதுக்கடை  போலீசார்  வழக்கு பதிவு  செய்து  விசாரித்து  வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page