கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 12 அடி மலைப்பாம்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில்  ஆற்றில் மீனுக்காக விரித்த  வலையில் 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது.

கன்னியாகுமரி  மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி  மலையோர  பகுதிகளில்  அதிக அளவு மலைப்பாம்புகள் காணப்படுகிற்றன. கன்னியாகுமரி  மாவட்டத்தில்  பாய்கின்ற அனைத்து  நதிகளும் இந்த  மலை பகுதிகளில்  இருந்து  மட்டுமே  உற்பத்தியாகிறது. இதனால்  ஆற்று நீர் வழியாக வரும்  மலைப்பாம்புகள் வயல்வெளிகள், நீர் நிலைகள்,ஆறுகள்,  வாய்க்கால்கள் போன்றவற்றில்  அடிக்கடி சிக்குவது  உண்டு.

தற்போது  கன்னியாகுமரி  மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக அதிக அளவில்  மழை  பெய்த  காரணத்தால் ஆறுகளில்  வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டது. இதனால் ஆறுகளில்  பொதுமக்கள் மீன்பிடிப்பது  அதிகமாக  உள்ளது. மட்டுமின்றி இதுபோன்ற  நேரங்களில்  மலையின்  உட்பகுதியில்  இருந்து பல  பொருட்களை  ஆற்று  நீரில்  அடித்து  செல்லப்படுவது  வழக்கம்.

இந்த  நிலையில்  திருவட்டார் பறளியாறு சப்பாத்து  பகுதியில் நேற்று  இரவு அப்பகுதி  இளைஞர்கள்  மீன்பிடிக்க  வலைகளை  விரித்துள்ளனர். இன்று  காலையில்  அப்பகுதி  மக்கள் அங்கு  குளிக்க சென்ற போது, மீன் பிடிப்பதற்காக விரித்த  வலையில் மலைப்பாம்பு சிக்கியிருப்பதை கண்டு, போலீசார்  மற்றும்  வனத்துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர்.

இதையடுத்து  சம்பவ  இடம் வந்த  வனத்துறையினர், அப்பகுதி  இளைஞர்கள் உதவியுடன் ஆற்றில்  இறங்கினர். தொடர்ந்து  வலையில்  சிக்கிய  12 அடி நீள மலைப்பாம்பை  பிடித்தனர்.   பாம்பை  சாக்கு பையில் அடைத்து, வனத்துறையினர் காட்டுப்பகுதியில்  கொண்டு விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page