கார்த்திகை மாதம் பிறந்தது யொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர் ஐயப்ப பக்தர்கள்
சரிமலையில் நடை பெறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி விரதமிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.அந்தவகையில் இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி காலை கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர் பக்தர்கள். கன்னியாகுமரியில் சபரிமலை செல்லும் பக்தர்கள், கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எழுப்பினர். வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து மாலை அணிந்தனர்.இன்று காலை ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளார்கள். நீலம், கருப்பு நிற உடை அணிந்து அவர்கள் வலம் வந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது.மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்து செல்பவர்கள் கன்னி சாமிகள் ஆவார்கள். கன்னிசாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர். இதை யடுத்து நாகர்கோவில், கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு குவிந்திருந்தனர். மேலும் தாங்கள் அணிவிக்கும் மாலைகளையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்