குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மேற்கு வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் கிள்ளியூர் தொகுதி நடைக்காவில் நடைபெற்றது .
இந்த கலந்தாய்வு கூட்டத்தின் போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும் மிகாயேல் தொண்டுநிறுவன அதிபரும் பிரவீன் என்பவர் பாகோடு பேரூராட்சி,திக்குறிச்சி பகுதி சிசில்குமார் , ஜெயா மற்றும் வீடுஇல்லாத 4 பேர்களுக்கு தலா 5 லட்சம் பதிப்புள்ள வீடு இலவசமாக கட்டி கொடுக்கப்படும் என்ற உத்திரவாத சான்றிதழை வழங்கினார், இதன் மொத்த மதிப்பு 20 லட்சம் ருபாய் ஆகும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய பொது செயாலாளர் தினேஷ் குண்டு ராவ் எம் எல் எ , தேசிய செயலாளர் சஞ்சய் தத், ஸ்ரீவெல்ல பிரசாத், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் , கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர்கள் செல்வம், அருள் பெத்தையா, துணை அமைப்பு தலைவர்கள் செல்வபெருந்தகை, மறைந்த மாநில செயல் தலைவர் வசந்தகுமார் மகன் ஏ ஐ சி சி உறுப்பினர் விஜய் வசந்த், எம் எல் எ- க்கள் பிரின்ஸ், விஜயதரணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உத்திரவாத சான்றிதழை வழங்கினார்கள்.
புலியூர் சாலை பகுதியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பிரவீன் தலைமையில் செயல்பட்டு வரும் மிகாயேல் தொண்டு நிறுவனம் ஏற்க்கனவே 5 இலவச வீடுகள், 12 இலவச திருமணங்கள், நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு மருத்துவ உதவிகள், கல்வி உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருவது குறிப்பிட தகுந்ததாகும்.