December 2, 2021 2:43 pm

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் வாக்கு சாவடி பிரதிநிதிகள் கூட்டம் நாளை நடக்கிறது.

குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (மேற்கு)
வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நாளை நித்திரவிளையில் நடக்கிறது. இந்த  கூட்டத்தில் காங்கிரஸ்  மாநில தலைவர் அழகிரி கலந்து  கொள்கிறார்.

இது  தொடர்பாக மேற்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் எ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.-
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை கிள்ளியூர் கிழக்கு, கிள்ளியூர் மேற்கு, முஞ்சிறை கிழக்கு, முஞ்சிறை மேற்கு, குழித்துறை நகரம், மேல்புறம் மேற்கு ஆகிய பகுதிகளை சார்ந்தவர்களுக்கு காலை 10.00 மணிக்கும், மேல்புறம் கிழக்கு, திருவட்டார் கிழக்கு, திருவட்டார் மேற்கு, பத்மநாபபுரம் நகரம் தக்கலை வடக்கு ஆகிய பகுதிகளை சார்ந்தவர்களுக்கு மாலை 3.00 மணிக்கும் நடைபெற உள்ளது. கிள்ளியூர் தொகுதி நடைக்காவு ஜங்ஷன் அருகில் உள்ள மைதானத்தில் வைத்து நடைபெற உள்ள இந்த கூட்டத்தில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக
பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம் எல் எ ,  தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே ஆர் ராமசாமி எம் எல் எ,
தமிழக பொறுப்பாளர்கள்  சஞ்சய் தத்,  ஸ்ரீவெல்ல பிரசாத்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்,  குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கிழக்கு தலைவர் ராதாகிருஷ்ணன், எம் எல் எ- க்கள்  பிரின்ஸ்,  விஜயதரணி   ஆகிய தலைவர்கள் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணி தலைவர்கள், வாக்குச்சாவடி பிரதிநிதிகள், காங்கிரஸ் வட்டார, நகர தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், செயல் வீரர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றார்கள். எனவே வாக்கு சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டதில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். என அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page