September 23, 2021 11:40 pm

கர்நாடகாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 10 குமரி மீனவர்கள். மீட்க கலெக்டரிடம் கோரிக்கை

கர்நாடகாவில் சிறை பிடிக்கப்பட்ட குமரி  மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களையும் மீட்க அரசு  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று  தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில் தலைமயில்  பொதுமக்கள்  கலெக்டரிடம் புகார் அளித்தனர். அந்த   புகார் மனுவில்   குறிப்பிட்டுள்ளதாவது.-

குமரிமாவட்டதை  சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 19-ம் தேதி கேரளமாநிலம்  கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் இருந்து  ஆழ்கடலுக்கு  மீன்பிடிக்க  சென்றனர். அங்குள்ள  உஸ்மான் என்பவருக்கு சொந்தமான ‘இந்தியன்’ என்ற அந்த படகில்  பிள்ளைத்தோப்பை சேர்ந்த ராபின்சன்(36), கன்னியாகுமரி  டென்னிஸ்(56), வாவுதுறை அருள்ராஜ் (42), மணக்குடி ஜோசப்(50), ஆழிக்கால் அருள்சீலன்(40), கடையப்பட்டினம் சுபின்(20), முட்டம் ரோகன் டிஜோ (18), பெரியவிளை  சாமுவேல்(18), எறும்புக்காடு சக்கரியா (27), ஆகிய 10  மீனவர்கள் அந்த படகில்  காணப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் மால்பே என்ற  பகுதியில் 23 நாட்டிங்கல் தொலைவில் கடந்த 22-ம்  தேதி மீன்பிடித்து  கொண்டிருந்போது, அங்குள்ள  மீனவர்கள் 10 படகுகளில் சென்று குமரி  மீனவர்களை சுற்றி  வளைத்து பிடித்துள்ளனர். மேலும்  தமிழக  மீனவர்களை  கடுமையான ஆயுதங்களால் தாக்கி காயப் படுத்தியுள்ளனர்.

பின்னர் படகையும்,  மீனவர்களையும் பிணைக் கைதிகளாக அழைத்து  சென்று கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். கர்நாடாக கடலோர காவல் படை,  உடுப்பி சட்டம் ஒழுங்கு  காவல் துறையிடம்  குமரி  மீனவர்களை ஒப்படைத்துள்ளனர்.

குமரி  மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கர்நாடகா மீனவர்களை  தாக்கியதாக அங்கு  பொய் வழக்கு பதிவு  செய்துள்ளனர். மேலும்  கொலை  முயற்சி, அத்துமீறல், கூட்டமாக கடலுக்குள்  கலவரத்தில் ஈடுபடல் போன்ற  குற்ற  செயல்  செய்ததாக வழக்கு பதிவு  செய்து, நீதி  மன்றத்தில் ஒப்படைத்து, உடுப்பி சிறையில் அடைத்துள்ளனர். சிறையில்  இருக்கும்  மீனவர்களை  உறவினர்களுடன் தொடர்பு கொள்ள கூட  அனுமதிக்கவில்லை. எனவே உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

எனவே கர்நாடகா சிறையில்  உள்ள குமரி  மீனவர்களை  மீட்க அரசு  பேச்சுவார்த்தை நடத்தி மீட்க வேண்டும், ஆழ்கடலில்  மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சிறை பிடிக்கப்பட்ட குமரி  மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களையும் மீட்க அரசு உடனடி  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என  மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page