திருநெல்வேலி யில்இருந்து களியக்காவிளை வழியாக கூண்டு கட்டிய மினி லாரியில் பதுக்கி கேரளாவிற்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேஷன் அரிசி இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார் உள்ளது. குறிப்பாக ரேஷன் அரிசி, கனிம வளங்கள் போன்றவை கடத்துவது கட்டுப்பாடு இன்றி தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தக்கலை பகுதியில் தூத்துக்குடியில் இருந்து கடத்தி வந்த 20 டன் ரேஷன் அரிசி பிடி பட்டது பெரும் பாரா பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மீண்டும் 3 டன் ரேஷன் அரிசி பிடிபட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் , மோகனகுமார், காவலர்கள் பெனடிக்ராஜ் , ஜெயபால் ஆகியோர் தமிழக கேரள எல்லை களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூண்டு கட்டிய மினி லாரியை சோதனை செய்தபோது அந்த லாரியில் சிறு சிறு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யபட்டது. வாகனத்த்தை ஓட்டி வந்த கடலூரை டாக்டர் அம்பேத்கார் நகரை சேர்ந்த நக்கீரனை கைது செய்தனர். விசாரணையில் திருநெல்வேலிமா வட்டத்தில் இருந்து அரிசியை கடத்தி கேரளா கொண்டு செல்வதாக தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்த அரிசியை அரசு உணவு குடோனில் ஒப்படைத்தனர்.