களியக்காவிளை காய்கறி சந்தைக்கு நவீன முறையில் கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து நிதியும் ஒதுக்கீடு செய்த தளவாய்சுந்தரத்துக்கு தினசரி சந்தை வியாபாரிகள் சஙகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
களியக்காவிளை தினசரி சந்தை நூற்றாண்டு பழமையானது.இங்கு செயல்பட்டு வரும் காய்கறி சந்தையின் இடத்தை பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு எடுப்பதாக இருந்தது.காய்கறி வியாபாரிகளுக்கு படந்தாலுமூடு சந்தையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பல்வேறு அரசியல் கட்சி துணையுடன் வியாபாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்ததோடு பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் காய்கறி வியாபாரிகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்வதோடு நிதியும் ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார்.அதன் அடிப்படையில் 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது.இதற்காக களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலச்சங்கம் மீன் கமிஷன் கடை உரிமையாளர்கள் சங்கம் சில்லறை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில்,தளவாய்சுந்தரத்துக்கு நன்றி அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தலைவர் பிராங்கிளின் தலைமையில் செயலாளர் சுனில் துணை செயலாளர் ராஜன் ஆலோசகர் குழிவிளை விஜயகுமார் ஆகியோர் தளவாய்சுந்தரத்தை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.