காங்கிரஸ் மாநில தலைவர் பிறந்த தினம் முன்னிட்டு மரக்கன்றுகள் விநியோகம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பிறந்த  தினம் முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சார்பில் குருந்தன்கோடு பகுதி  விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்  வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார். இளைஞகாங்கிரஸ் மாநில பொது செயலாளர் நவீன்குமார், வட்டார தலைவர் ஜெரால்டு கென்னடி முன்னிலை வகித்தனர். சிறப்பு  விருந்தினராக  காங்கிரஸ் எஸ் சி எஸ் டி பிரிவு தலைவர்  பேராசிரியர் சுந்தர்ராஜ்  கலந்து  கொண்டார்.

நிகழ்ச்சியில் குளச்சல் நகர  தலைவர் ரமேஷ், குருந்தன்கோடு பஞ்சாயத்து ராஜ் தலைவர்கள் ஜாண் மில்டன், நடராஜன், தக்கலை வட்டார தலைவர் வின் வாஷிங்டன், மாவட்ட  துணை தலைவர் முருகன், மாகின், பிரபின் , ஆண்டனி, உட்பட பலர்  கந்து  கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page