December 2, 2021 2:28 pm

காப்புக்காடு அருகே குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் சீரழிந்த சாலை. 3 வருடங்களாக சீரமைக்கவில்லை என புகார்.

காப்புக்காடு பகுதியில்  குடிநீர் திட்ட குழாய்  உடைப்பால் சீரழிந்த  சாலையை 3 வருடங்கள் ஆகியும்  சீரமைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
       தமிழ்நாடு  குடிநீர்  வடிகால் வாரியம் சார்பில் குமரி மாவட்டத்தில் 79 கடலோர கிராமங்கள், 17 பேரூராட்சிகள், 19 வழியோர கிராமங்கள் பயன்படுகின்ற  வகையில் சுனாமி கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. இதற்காக குழித்துறை ஆற்றுப்பகுதியான விளாத்திவிளை   பகுதியில் ஆற்றில் உறிஞ்சு கிணறுகள்  அமைக்கப்பட்டு, ராட்சத குழாய்கள்   மூலம் தண்ணீர்  உறிஞ்சி சுத்திகத்திரிக்கப்பட்டு குமரி  மாவட்டத்தில்  பல  பகுதிகளுக்கு  வினியோகம்  செய்யப்பட்டு  வருகிறது. கடந்த 2010-ம்  ஆண்டு தற்போதைய தமிழக  முதல்வர் ஸ்டாலின்,  அப்போது  துணை முதல்வராக இருந்த போது இந்த  திட்டத்தை துவக்கி  வைத்தார்.
      இந்த  திட்டத்தில்  தண்ணீர்  விநியோகிக்கப்படும்  குழாய்கள் அனைத்தும் பொதுமக்கள்  பயன்படுத்தும்  சாலைகளை உடைத்து  அதன்  நடுப்பகுதியில்  குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள்   அடிக்கடி பழுது ஏற்படுவதால் தண்ணீர்  வேகமாக  வெளியேறும்  பொது,  சாலைகளில் ராட்சத  பள்ளம்  ஏற்பட்டு, சாலை சேதம்   ஏற்படுவது வழக்கம். இந்த  நிலை  மாவட்டத்தில்  பல  பகுதிகளில்  நடந்து  வருகிறது.
      இது  போன்று  காப்புக்காடு  பகுதி, அத்திக்குழி சந்திப்பு  பகுதியில்  இருந்து  விளாத்திவிளை வழியாக அஞ்சாலிக்கடவு செல்லும்  சாலையிலும் ராட்சத குழாய்கள்  நீரேற்று  நிலையத்துக்காக பதிக்கப்பட்டுள்ளன. இதனால்  அத்திக்குழி   சந்திப்பில்  இருந்து விளாத்திவிளை   செல்லும்  பகுதியில்  பல மீட்டர்  தூரம்  அடிக்கடி ஏற்படும்  குழாய்  உடைப்பால்  சாலை சேதமடைந்துள்ளது. தற்போது  பொது  மக்கள்  நடந்து  செல்ல முடியாத  வகையில்   காணப்படுகிறது.
         அதே நேரம் இந்த சாலையை  தினமும்  25 க்கும்  அதிகமான சுற்றுவட்டார கிராம  மக்கள்  பயன்  படுத்தி  வருகின்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள்  தினமும் இந்த  வழியாக  செல்கிறது.  ஆனால்  தற்போது  மக்கள்  நடந்து செல்ல முடியாத  நிலையில்  காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி  மக்கள் அதிகாரிகளிடம்  பல  முறை  மனு  அளித்தும்  இது வரையிலும்  சீரமைக்கவில்லை  என  புகார்  எழுந்துள்ளது.
         தற்போது  கடந்த 3  தினம்  முன்பு  மீண்டும்  அந்த பகுதியில்  குழாய் உடைப்பு  ஏற்பட்டு  தண்ணீர்  சாலையில்  பாய்ந்த  பிறகும்  சம்மந்தப்பட்டவர்கள் கண்டு  கொள்ளவில்லை. எனவே 3  வருடமாக சீரமைக்காத  சாலையை புதிதாக  பொறுப்பேற்றிருக்கும்  அரசு சீரமைத்து தர  சம்மந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு  உத்தரவிட மக்கள்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page