கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம் எல் எ வீட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பிரிட்ஜ் வெடித்து சிதறியது.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் எ கருங்கல் பகுதியில் வசித்து வருகிறார். இரண்டு மாடி வீட்டில் வசிக்கும் இவர் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் மேல் மாடியில் வசிக்கிறார். கீழ் பகுதியை அலுவலகமாக உபயோகிப்பது வழக்கம்.
கடந்த இரு தினங்களாக மேற்குமாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்கு சாவடி பிரதி நிதிகள் கூட்டம் நடைக்காவு பகுதியில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். நேற்று நிகழ்ச்சிகள் முடித்து, இரவில் அவர் வீட்டில் மேல் மாடியில் வழக்கமான முறையில் படுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் ஹாலில் திடீர் என தீ பிடித்தது. இதில் எம் எல் எ , அவர் மனைவி, பிள்ளைகள் அனைவரும் உள்ளே மாட்டிக் கொண்டனர். மேல்மாடியில் நடுப்பகுதியில் தீ பிடித்ததால் அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
உடனடியாக பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் திரண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடம் வந்தனர். தீயணைப்பு வீரக்கல் விரைந்து செயல்பட்டு, அறையின் உள்ளே மாட்டிய எம் எல் எ -வின் ஒரு மகனை ஜன்னல் உடைத்து மீட்டனர். பின்பு அதே முறையில் அனைவரையும் மீட்டனர். ஆனால் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் ஓன்று வெடித்து சிந்தியது. மேலும் பல பொருட்கள் நாசமானது.