குமரியில் பத்திரிக்கை ஏஜென்ட் வீட்டை சூறையாடிய கஞ்சா கும்பல் . போலீசில் புகார்.

கன்னியாகுமரி மாவட்டதில்  கஞ்சா விற்பனை  குறித்து தகவல் கொடுத்ததாக  பத்திரிக்கை ஏஜென்ட் ஒருவரின் வீடு சூறையாடப் பட்ட சம்பவம் நடந்துள்ளது.

களியக்காவிளை அடுத்த பளுகல் பகுதி தேவிகோடு, கானத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி( 50).  இவர் தினசரி பத்திரிக்கைகள் சப்ளை செய்யும் ஏஜெண்டாக உள்ளார். இவர் இன்று மதியம் தன் குடும்பத்தாருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அவர் வீட்டில் புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் , அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது குறித்து மாசிலாமணி காவல்துறைக்கும், பத்திரிகைக்கும் ,தகவல் கொடுத்ததாக கூறி வீட்டை அடித்து உடைத்துள்ளனர். மேலும் வெளியில் நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்து விட்டு,  அந்த வாகனத்திலிருந்த 42 ஆயிரம் ரூபாயையும் அந்தக் கும்பல் எடுத்து சென்றுள்ளார்.

மேலும்  அவரது குடும்பத்தாரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து பளுகல் காவல் நிலையத்தில் மாசிலாமணி புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா கும்பல் வீடு பத்திரிக்கை ஏஜென்ட் ஒருவரின் புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி  மாவட்டத்தில் சமீப காலமாக இது  போன்ற  கஞ்சா கும்பல்கள் பொது  மக்களிடம்  அது மீறும் சம்பவங்கள்  பல  நடந்துள்ளது குறிப்பிட  தகுந்ததாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page