போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது….
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது….
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமினை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் IAS ஆகியோர் துவக்கி வைத்தனர்….
நிகழ்ச்சியில் ஆணையர் ஆஷா அஜித் IAS அவர்கள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் அவர்கள், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் போஸ்கோராஜ் அவர்கள், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்…….