October 25, 2021 4:30 am

குமரி கனமழையால் உப்பள உரிமையாளர்கள் கவலை

‘யாஸ்’ புயலால் குமரியில் பெய்த கன மழையால், உப்பளத்தில் சேமித்து வைத்திருந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உப்பு கரைந்ததால், உரிமையாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

. கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதி உப்பளங்களுக்கு மழை வந்தால் சோதனை தான். பழையாறு கடலில் கலக்கும் பகுதி என்பதால், இங்கு தண்ணீர் கடலாக மாறி விடும். மழை சீசனில் உப்பள உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் உப்பு குவியலை பாதுகாத்துக் கொள்வர்.புயல் காலங்களில் எதுவும் செய்ய முடியாததால், உப்பு தண்ணீரில் கரைந்து விடும். மே 27ல் யாஸ் புயலால், குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சுவாமிதோப்பு பகுதியில் குவித்து வைத்திருந்த உப்பை கரைத்து சென்றது. மேலும் பம்பு செட்டுகள், மின் கம்பங்கள், உப்பு சேகரிப்பு கொட்டகைககள் அனைத்தும் நாசமாயின.தண்ணீர் புகுந்ததால் உப்பளங்களை சுத்தம் செய்து, அடுத்து உப்பு தயாரிக்க நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகும். 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான உப்பு கரைந்தது.இதை சீரமைக்க கோடிக்கணக்கில் செலவாகும் என, உப்பள உரிமையாளர்கள் கூறினர்.ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நிவராண உதவி அறிவித்த அரசு, உப்பை மட்டும் கண்டுகொள்ளவில்லை.அரசு பரிசீலிக்க வேண்டும் என்பது தான் உப்பளவாசிகளின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page