October 25, 2021 4:13 am

குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் வலிப்பு நோயால் பலி.

புதுக்கடை  அருகே  நண்பர்களுடன்  குளத்தில்  குளிக்க சென்ற  வாலிபருக்கு வலிப்பு  ஏற்பட்டதால் தண்ணீரில்  மூழ்கி  பலியானார்.
     குமரி மாவட்டம் புதுக்கடை அருகே ஹெலன் நகர் மீனவர் கிராமம் , 5-ம்  அன்பியத்தை  சேர்ந்தவர் சின்னப்பன்  மகன் சுஜின்ராஜ் (21). இவர்  கடந்த 3 வருடங்களாக வலிப்பு  நோய் பாதிப்பில்  இருந்து  வந்துள்ளார். நேற்று மதியம் தனது  நண்பர்களுடன் உசரத்துவிளை பகுதியில்  உள்ள  ஒரு கல்குவாரி குளத்தில்  குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டு இருந்த  நேரம் சுஜின்ராஜுக்கு திடீர் என வலிப்பு  ஏற்பட்டுள்ளது. இதில்  தண்ணீரில் மூழ்கிய அவரை  நண்பர்கள் மீட்டு, தேங்காப்பட்டணத்தில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். முதலுதவிக்குப் பின் குழித்துறை  அரசு  மருத்துவமனைக்கு  கொண்டு   சென்றனர். அங்கு  அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுஜின்ராஜ் ஏற்கனவே  இறந்து  விட்டதாக  தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின்  பேரில்  புதுக்கடை போலீசார்  வழக்கு பதிவு  செய்து  விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page