குழித்துறை மேற்கு ரயில்நிலையம் அருகில் ஆண் பிணம் . ஒரு மணி நேரம் ரயில் சேவை நிறுத்தம்.

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில்  ரயில் நிலைய தண்டவாளத்திலேயே ஆண்  பிணம் கிடந்ததால் ஒருமணிநேரம்  சிறப்பு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

குமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் இன்று காலையில் தண்டவாளத்தில் ஆன் பிணம் ஓன்று  காணப்பட்டுள்ளது.  இது தொடர்பாக  விசாரித்த  போது பிணமாக கிடந்தவர் குழித்துறை அருகே பாகோடு, கோவில்வட்டம் பகுதியை சேர்ந்த சசி (44) என்பது  தெரிய வந்துள்ளது.  இது  தொடர்பாக ரயில்வே போலிஸாருக்கு உடனடி  தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில்  காலை திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில்வே பணியாளர்களை ஏற்றி வரும் சிறப்பு ரயில் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் 7.10 மணியளவில் வந்தது.  சசியின் உடல் தண்டவாளத்தில் கிடந்ததால் பணியாளர்கள் சிறப்பு ரயில் இந்த ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து  நாகர்கோவிலில் இருந்து ரயில்வே போலீசார் வந்து பிணத்தை மாற்றிய பிறகு, சுமார்  ஒரு மணி நேரத்துக்கு பிறகு இந்த ரயில் புறப்பட்டு சென்றது.   சசியின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து,  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சசியை கட்டிட  வேலை செய்பவர்  என  தெரிய  வந்துள்ளது. இவர்  எதற்காக ரயில்  நிலையம் வந்தார் எப்படி  இறந்தார் என்ற  விபரம் தெரியவில்லை. சசி  மீது வேறு  ஏதாவது ரயில் மோதியதா?.. அல்லது  தற்கொலை செய்து  கொண்டாரா என  போலீசார் விசாரித்து  வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page