கொல்லங்கோடு பத்திரகாளி தேவி கோவிலில் வித்யாரம்பம் . விஜயதசமியை முன்னிட்டு கல்வி துவங்கிய குழந்தைகள்

விஜய தசமி முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்தில்  பிரசித்தி  பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி தேவி கோவிலில்  வித்யாரம்பம்  நிகழ்ச்சி  நடந்தது.

பாரம்பரிய  நிகழ்ச்சியான  இந்த  வித்யாரம்பம்  என்பது, நவராத்திரி  விழாவின் இறுதிநாளான விஜயதசமி  தினத்தில்  நடத்தபடுவது வழக்கம். பள்ளி செல்ல  தயாராகும்  குழந்தைகளை கோவில்களில் அல்லது  சென்று, சாமி  சன்னதி முன்பு குழந்தைகளின் கை விரலால்  அரிசியில் ‘அ’ என்ற எழுத்தை  எழுத வைப்பார்கள். மேலும்  கோவில் பூசாரி  எழுத்தாணியால்  குழந்தைகளின்  நாக்கில் தமிழ்  எழுத்துக்களை  எழுதுவார்.  இப்படி  செய்தால் அந்த  குழைந்தைகள்  படிப்பில்  உயர்  நிலையில்  வருவார்கள்  என்பது  நம்பிக்கை.

கன்னியாகுமரி  மாவட்டத்தில் நேற்று  கோவில்களில்   இந்த  நிகழ்வு  சிறப்பாக நடந்தது. கொரோனா தோற்று  காரணமாக பிரசித்தி  பெற்ற  ஆலயங்களில்  இந்த  நிகழ்ச்சி  நடத்தப்படவில்லை. அதனால் சிறு  கோவில்கள்,  வீடுகளில்  இந்த  பாரம்பரிய  நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டன.

கிள்ளியூர்  தொகுதிக்குட்பட்ட பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில்  நேற்று ஏராளம்  பேர்  கலந்து  கொண்டனர். தாம்பூல தட்டில் அரிசியை  நிரப்பி அதில்  குழந்தைகளின் கை விரலால்  எழுத  பழகினார்கள்.  சமூக  இடைவெளியை கடைபிடித்து  இந்த  நிகழ்வு  நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page