தமிழகத்தில் அ தி மு க தலைமையில் தான் பா. ஜ கூட்டணி.- பொன் . ராதாகிருஷ்ணன் பேட்டி

வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க-வுடன் கூட கூட்டணி அமையலாம்’ என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த நாளில் பேட்டி அளித்திருந்தார். இது  கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதுடன்,  அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் உட்பட சிலர் பதிலடி கொடுக்கும் சூழல் ஏற்பட்டது. பரபரப்பான  சூழலில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க மாநில தலைவர் முருகன் சந்தித்து பேசினார். இதையடுத்து அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலையில்  நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.  பேட்டியின்போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது – , “தமிழக முதல்வர் என்ற முறையிலும், எங்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளோம். அ.தி.மு.க கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை.

தமிழகத்தில் கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்கும். நான் மாநில தலைவராக இருந்த போது ஒரு கூட்டணியை ஏற்படுத்தினேன் . அப்போது, அகில இந்திய தலைமையின்   அனுமதி பெற்ற பிறகுதான் ஏற்படுத்த முடிந்தது . தமிழக முதல்வரை நான் என்ன விஷயத்துக்கு சந்திக்க போகிறேனோ, அதே விஷயத்துக்காகத்தான் மாநில தலைவரும் சந்திக்கச் சென்றிருக்கிறார். பா.ஜ.க ஒரு அகில இந்திய கட்சி. அதை குறுகிய வட்டத்துக்குள் அடைக்காதீர்கள் என்கிறோம்.  குறுகிய வட்டத்தில் இருந்து எங்களால் எந்த முடிவும்  எடுக்க முடியாது.

அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது சுமூக முடிவு. அவர்கள் பிளவுபட வேண்டும் என சிலர் நினைத்தார்கள்.  அது நடக்கவில்லை. தி.மு.க வரும் தேர்தலில் இன்னைக்கு இருக்கும் பலத்தில் மூன்றில் ஒருபங்கு பெற்றால், அது அவர்ககுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அ.தி.மு.க தலைமையின் கீழ் எங்கள் கூட்டணி உள்ளது. தமிழகத்தில் எங்க தலைமையில் கூட்டணி இல்லை.

2021-ஆண்டு அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக பா.ஜ.க இருக்கும் என எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து கட்சியும் ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கையில்தான் கட்சியை வழிநடத்துகின்றன . நான் பா.ஜ.க மாநில தலைவராக இருக்கும்போது 2014 மத்தியில் ஆட்சி, 2016- மாநிலத்தில் ஆட்சி என்று தாமரை மாநாட்டில் தீர்மானித்தோம். இப்போது மோடி அரசு, காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை சரி செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் கூட்டணியை காலமும், அகில இந்திய தலைமையும்தான் முடிவு செய்யும்” என்றார்.

குமரிமாவட்டத்தில் நடக்கும்  நவ ராத்திரி  ஊர்வலம்  என்பது ஊர்வலம்  அல்ல. ஒரு  வழிபாட்டுமுறை. 1700-ம் ஆண்டுகளில்  இருந்து வகுக்கப்பட்ட  முறை. கொரோனா காலத்தில் ஆலயத்தின்  உள்ளே வழிபாட்டு முறைகள் எப்படி  அனுமதிக்கப் பட்டதோ, அதேபோல இந்த  முறைமைகளை மற்ற  யாருக்கும்  எந்த அதிகாரமும் இல்லை. தமிழக அரசு கேரளா அரசுடன்  பேசி  நடவடிக்கை   எடுக்க  வேண்டும். என  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page