திங்கள்சந்தை பணிமனையில் விபத்து விழிப்புணர்வு முகாம்.

திங்கள்சந்தை பணிமனையில் விபத்து விழிப்புணர்வு முகாம்
திங்கள் சந்தை ஏப் :
திங்கள்சந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் விபத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குமரிமாவட்டத்தில் அதிவேகம் மற்றும் கவனக்குறைவால் பல விபத்துக்கள் நடந்து வருகிறது. இதுபோன்ற விபத்துக்களை குறைக்கவும், வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் திங்கள்நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் விபத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அரவிந்த் தலைமை தாங்கினார். குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்த்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறுகையில் டிரைவர்கள் மக்கள் நலனில் அக்கரை கொண்டு நடந்து கொள்ள வேண்டும். பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தும்போது கையால் சமிக்சை கொடுத்து ஓரம்கட்டி நிறுத்த வேண்டும். பயணிகள் ஏறுவதையும் இறங்குவதையும் உறுதி செய்தபின் பஸ்ஸை நகர்த்தவும். பைக்கில் பயணம் செய்யும்போது மிக கவனமாக ஓட்டிச் செல்லவும். குறுகிய ரோடு மற்றும் ஆபத்தான பகுதிகளில் மிக கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் பேசினார். முகாமில் உதவி மேலாளர்கள் கோபால கிருஷ்ணன், மதுகுமார், அழகேசன், மகாதேவன்,
திங்கள்சந்தை பணிமனை கிளை மேலாளர் வேல்முருகன், குளச்சல் கிளை மேலாளர் சுந்தர்சிங், குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, எஸ்.ஐ. சுரேஷ் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page