October 25, 2021 4:07 am

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவியும் கேரளா விசை படகுகள். கொரோனா பீதியில் மக்கள். கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

 

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் எந்த கட்டுப் பாடுகளும் இல்லாமல் கேரளா மாநில மீன் பிடிப்படகுகள், லாரிகள் அதிக அளவில்  குவிந்து  வருவதாகவும்,  இதனால் கொரோனா பாதிப்பு  ஏற்பட அதிகம் வாய்ப்பு  உள்ளதாகவும் மீன்பிடி துறைமுக  பைபர் படகு மீன்பிடி தொழிலாளர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம்  புகார்  அளித்துள்ளது.

நாடு  முழுவது  கொரோனா பாதிப்பால்  பலவித  கட்டுப்பாடுகள் நிலுவையில்  உள்ளன.. குமரி மாவட்டத்தில்  தற்போது சிறிது  தளர்வு   ஏற்பட்டுள்ளது. இதனால்  முடங்கி  கிடந்த மக்களின்   வாழ்வு தற்போது  சிறி து  சிறிதாக இயல்பு  நிலைக்கு  திரும்பி  வருகிறது.   மீனவர்கள் பல மாதங்கள்  தொழில்  செய்யமுடியாமல்  முடங்கிய  நிலையில்  காணப்பட்டனர். தற்போது மீன்பிடி  தொழிலுக்கு  சில  விதி  முறைகளுடன் சென்று  வருகின்றனர்.

குறிப்பாக  தேங்காப்பட்டணம்  மீன்பிடித்துறை  முகத்தில் இருந்து  படகுகளில்  சுற்று வட்டார பகுதி மக்கள் மீன்பிடிக்க சென்று  வருகின்றனர்.

இதற்கிடையில்   கேரளா மாநிலத்தில்  அதிக அளவில் கொரோனா  தொற்று  உள்ளதால் அங்கு தடுப்பு  நடவடிக்கைகள் தீவிரமாக  உள்ளது. அங்கு மீனவர்கள் கடலில்  மீன்பிடிக்க  முடியாத  சூழல் உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது  அங்குள்ள மீனவர்கள் தேங்காப்பட்டணம்  மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிக்க குவிந்துள்ளனர். நூற்றுக்கும்  அதிகமான கேரளா  மீன்பிடி  படகுகள் தேங்காப்பட்டணம்  பகுதியில்  குவிந்துள்ளன. ஏற்கனவே  இந்த துறைமுகத்தில்  வெளியூர் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது  என்ற  தடை  உத்தரவு  உள்ளது.

ஆனால்  உள்ளூரில் சிலரின்  உதவியால் கேரளா விசை படகுகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் அங்குள்ள மீனவர்கள் தேங்காப்பட்டணத்தில் தங்கியிருப்பதால்  அப்பகுதி  மக்கள்  திகில் அடைந்துள்ளனர். காரணம்  இவர்கள் எந்த  வித கொரோனா தொற்று  பரிசோதனை  இல்லாமல் தங்கியுள்ளனர். சர்வ சாதாரணமாக தேங்காப்பட்டணம்  பகுதி  கடைகள், ஹோட்டல்கள், டாஸ்மாக் கடைகள்  போன்றவற்றிக்கு செல்கின்றனர்.  மேலும்  மீன்களை  ஏற்றி  செல்ல  எந்த  தடையும்  இல்லாமல் தினமும் நூற்றுக்கணக்கில்  கேரளா  லாரிகளும்  வந்து  செல்கின்றன. இது  தொடர்பாக சமமந்த பட்ட  துறை  அதிகாரிகளிடம்  புகார்  தெரிவித்தும் ,  எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை  என  புகார்கள்  எழுந்துள்ளது. கடந்த ஒருவார காலமாக இது  நீடித்து  வருகிறது. எனவே  தேங்காப்பட்டணத்தில்  தஞ்சம் அடைந்துள்ள கேரளா விசைப்படகுகளையம்  மீனவர்களையும் உடனடி  வெளியேற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் துறைமுகத்தில் தினமும் அதிக  அளவில்  பொதுமக்கள்  வந்து  செல்கின்றனர். எந்த  வித சமூக இடை  வெளியும்  கடை பிடிப்பதில்லை. இதனால்  பெரும்  ஆபத்து ஏற்பட வாய்ப்பு  அதிகமாக உள்ளது. இதற்கும்  உரிய நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.    என துறைமுக பைபர் படகு மீன்பிடி  தொழிலாளர் சங்க  தலைவர் சேசாரி தலைமையில் சங்க  ஆலோசகர் முனைவர் ஜோர்தான், நிர்வாகிகள்  பலர் மாவட்ட கலெக்டர் , மீன்துறை உதவி  இயக்குனர், பத்மநாபபுரம் கோட்டாட்சியாளர்  உள்ளிட்ட அனைத்து  துறை அதிகாரிகளிடம் நேரடியாக   மனு  அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page