December 2, 2021 3:29 pm

நாகர்கோவிலில் சாலைகள் சீரமைக்க வலியுறுத்தி தமிழ் புரட்சி களம் கட்சி ஆர்ப்பாட்டம்

தொடர் உயிர்பலி வாங்கிகொண்டிருக்கும் நாகர்கோவிலில் முக்கிய சாலைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து குமரி மாவட்ட தமிழ் புரட்சிகளம் கட்சி  சார்பில் அதன் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சாலைவிரிவாக்க பணிகள், பாதாளசாக்கடை திட்ட பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என பல்வேறு பணிகளும் சாலையோரங்களில் குழி தோண்டி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் பாதியாக காணப்படுகின்றன. இதன் காரணமாக இருவழிப்பாதைகளில் வாகனம் செல்வது சிரமமாக காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து சாலை விபத்துகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

கடந்த இரு தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் அரசு பேருந்தில் உரசி விபத்துக்குள்ளானார்கள். இதில் கணவன் கண்முன்னே வளர்மதி என்பவர் தலை நசுங்கி பலியானார். இதே ப் போன்று தினமும் வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தொடர்ந்து நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடக்கும் வாகன விபத்துகளுக்கு குண்டும் குழியுமான சாலைகள் காரணமாவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலைகள் வழியாக செல்லும் அரசு அதிகாரிகள் இதை கண்டும்காணமால் போகின்றன்றனர்.  இனி எத்தனை உயிர்பலிகளை இந்த நாகர்கோவில் மாநகராட்சி சாலைகள் வாங்க போகுதோ என பொதுமக்கள் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கின்றனர்.

எனவே இந்த சாலைகளை உடனடியாக செப்பனிடவேண்டும் அடுத்தடுத்து உயிர்பலி ஏற்படாதவாறு சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யவேண்டும் என குமரி மாவட்ட தமிழ் புரட்சி களம் கட்சி சார்பில் அதன் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சி மாவட்ட செயல் தலைவர் பிரேம் குமார்,  மாவட்ட செயலாளர் வின்சன்ட், மாவட்ட பொருளாளர் நாகராஜன்,  மாநகர தலைவர் வின்னிங்ஸ் மணிகண்டன் , அணி தலைவர்கள்  சைஜீ, ஜான்சன்,  மாணிக்கவாசகம்,  மாவட்ட துனை செயலாளர் பாபு,  இளைஞரணி துனை தலைவர் ஆல்டோ, ராஜாக்கமங்களம் ஒன்றிய தலைவர் ஸ்ரீகுமார் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page