December 2, 2021 3:05 pm

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் கத்தியுடன் பிடிபட்ட வாலிபர் . போலீசார் விசாரணை

குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலை நேற்று இரவு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது . இன்று விடுமுறை நாளான காரணத்தால் பரபரப்புடன் நகர பகுதி இயங்கி கொண்டிருந்தது.

அப்போது  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சாலையில்  இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று உரசின.  இதனால் இரு வாகனங்களையும் ஓட்டிவந்த இளைஞர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வார்த்தகராறு முற்றி , ஒரு இளைஞர் மற்றொரு இளைஞரை தாக்க முற்பட்டதால் பார்த்துக் கொண்டு நின்ற பொது மக்கள் இருவரையும் சமாதான படுத்த முயன்றனர். ஆனால் ஒரு இளைஞர் மன்றாருவரை தாக்குவதில் குறியாக இருந்துள்ளார். அந்த இளைஞரின் செயல்பாடு வித்தியாசமாக இருந்ததால் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தாக்க முற்பட்ட இளைஞரை தடுத்து நிறுத்தியது மட்டுன்றி, அந்த நபர் பார்க்க வித்தியசமான தோற்றத்தில் இருந்ததால், அவரை தர்ம அடிகொடுத்து அவரின் வாகனத்தையும் பரிசோதித்தனர்.  அப்போது அந்த வாகனத்தில் இரண்டு கத்திகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

உடனே அங்கு வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் அந்த இளைஞரையும் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியையும் பொதுமக்கள்  ஒப்படைத்தனர்.

அவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அந்த இளைஞரை போலீஸ் நிலையம்  அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த இளைஞர் யார் ?….எந்த ஊர் எனவும், இவர் எதற்காக கத்தி வைத்திருந்தார் …? இவர் குற்ற வழக்கு பின்னணி கொண்டவரா ?என்பது குறித்து கோட்டார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page