நாகர்கோவில் புலவர்விளை ஊர் தேவி முத்தாரம்மமன் கோவில் விஜயதசமி விழா

நாகர்கோவில் புலவர்விளை ஊர் தேவி ஶ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் விஜயதசமி விழா நடைப்பெற்றது.

நவராத்திரி விழாவானது 10 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரித்தானது.
நவராத்திரி நிறைவடைந்த நிலையில் துர்கை பூஜையின் இறுதி நாளான இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்கை அம்மன் மகிஷாசூரனை வதம் செய்த நிகழ்வை போற்றும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுவதாக ஐதீகம்.

தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும் மிகப்பெரியப்பண்டிகை ஆகும். அதேபோல் குமரிமாவட்டம் நாகர்கோவிலில் குமரியின் குலசேகரப்பட்டணம் என்று அழைக்கப்படும் புலவர் விளை ஊர் ஶ்ரீ முத்தாரம்மன் ஆலயத்தில் அம்மன் வீதி உலா வந்து சூரனை வதம் செய்து மகிஷாசூரசம்ஹாரம் கொண்டாடப்பட்டது.இத்திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அம்மன் அருள் பெற்று சென்றனர்.

நிகழ்ச்சியில் புலவர்விளை ஊர் தலைவர். செல்வராஜன்,துணைத்தலைவர். சேகர்,செயலாளர்.பெருமாள்,பொருளாளர். கோபாலகிருஷ்ணன்,பொதுச்செயலாளர். இராதகிருஷ்ணன், துணைச்செயலாளர். நாகராஜன் மற்றும் தசரா கமிட்டி உறுப்பினர்கள். முத்துராஜா,ஜெயபாலன்,சந்திரசேகர்,விஜய் மற்றும் பலரின் ஒத்துழைப்பில் 9வது தசரா பெருந்திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page