September 23, 2021 11:41 pm

பிகார் சட்ட மன்ற தேர்தல் . வாக்கு பதிவு துவங்கியது.

பீஹார் சட்டசபைக்கு  தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையுடன், இன்று நடக்கும் முதல் கட்ட தேர்தலில்  71 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு துவங்கியது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மூன்று கட்டங்களாக இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம்  243 தொகுதிகளில், முதல் கட்டமாக, 71 தொகுதி காக்கு இன்று ஓட்டுப் பதிவு துவங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தலில், 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.14 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், ஓட்டளிக்க உள்ளனர்.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, தே.ஜ., கூட்டணி களத்தில் உள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள், ‘மெஹா’ கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

நாட்டில் கொரோனா பரவல் துவங்கிய பின் நடத்தப்படும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பது குறிப்பிட தகுந்ததாகும்.  1,600 வாக்காளர்களுக்கு, ஒரு ஓட்டுச் சாவடி அமைக்கப்படும். இம்முறை, 1,000 வாக்காளர்களுக்கு, ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டளிப்பதற்கு முன், வாக்காளர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கையுறைகள் வழங்கப்பட உள்ளன. வாக்காளர்கள், முககவசம் அணிந்த வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தபால் மூலம் ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான ஓட்டுகள், நவம்பர்  10-ம் தேதி எண்ணப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page