October 25, 2021 3:39 am

பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது. கொல்லங்கோடு போலீசார் அதிரடி.

குமரி கேரளா பகுதிகளை கலக்கிய பிரபல பெண் கஞ்சா வியாபாரி கொல்லங்கோடு  போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குமரிமாவட்டம் கொல்லங்கோடு அருகே அணுக்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ராணி என்ற ஆட்டோ ராணி (46). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் கேரளா தமிழக பகுதிகளில் கஞ்சா விற்பனை  செய்து  வருபவர். குறிப்பாக  கல்லூரி  மாணவர்களை  குறி  வைத்து  கஞ்சா விற்பதில்  கில்லாடியான இவர்  மீது  கேரளாவில்  ஏராளம்  கஞ்சா வழக்குகள் உள்ளன.

தமிழக போலீசார்  ராணியை  பிடிக்க  பல முறை   முயன்றும்,  ராணி  போலீசார் கையில்  சிக்காமல் தப்பித்து  வந்தார். இந்த  நிலையில்  நேற்று  இரவு  கொல்லங்கோடு அருகே ஊரம்பு  சந்திப்பு  பகுதியில்  இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள்  தலைமையில் போலீசார் வாகன  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  அந்த  வழியாக மொபெட் வாகனத்தில்  ராணி  என்ற ஆட்டோ ராணி  வந்துள்ளார்.

போலீசாரை  கண்டதும்  ராணி எஸ்கேப் ஆக  முயற்சித்துள்ளார். ஆனால் சுதாரித்த போலீசார் அவரை  சுற்று  வளைத்து, வாகனத்தை  சோதனையிட்டனர். அப்போது  அந்த வாகனத்தில்   கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சோதனையில் 260 கிராம்  கஞ்சா பறிமுதல் செயப்பட்டது. இதையடுத்து, போலீசார்  கஞ்சா மற்றும் மொபட் வாகனம்   பறிமுதல் செய்ததுடன் , வழக்கு பதிவு  செய்து, விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page