பி.எப்.எம் இந்தியா சபையின் 5 – வது நிர்வாக தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த பிஷப் செல்வதாஸ் பிரமோத் பதவி ஏற்பு

பைபிள் பெயித் மிஷன் இந்தியா சபையின் 5 -வது நிர்வாக தலைவராக பிஷப் செல்வதாஸ் பிரமோத் பதவி ஏற்றார்.
களியக்காவிளை அருகே பாறசாலை மெளன்ட் சீனாய் சபை தலைமையகத்திலுள்ள மோசஸ் மெம்மோறியல் ஹாலில் ஜெபத்துடன் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

பி.எப்.எம் இந்தியா சபை ஆர்ச் பிஷப் முனைவர் மோசஸ் சுவாமிதாஸ், இ.சி.ஐ பேராயர் முனைவர்  சாம் ஏசுதாஸ் , சென்ட் தோமஸ் இவாஞ்சலிக்கல் சபை பேராயர் முனைவர் ஜோர்ஜ் ஈப்பன், சோள் வின்னிங் சர்ச் பேராயர் முனைவர் ஆஸ்டின் பால், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தற்போது நிர்வாக தலைவராக பொறுப்பேற்ற பிஷப் செல்வதாஸ் பிரமோத், பி.எப்.எம் இந்தியா சபையின் ஒடீஷா, இராஜஸ்தான் மாநில பொறுப்பு வகித்து வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகேயுள்ள உத்திரம்கோடு பகுதியைச் சார்ந்த இவர் கன்கார்டியா செமினாரி,கோள் கண்ணன்மூலை செமினாரியில் இறையியல் படிப்பும் , தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டமும் முடித்து மூத்த ஆராய்ச்சி அறிஞராக பணியாற்றியுள்ளார். கேரள மாநில ஸ்டூடன்ஸ் கிறிஸ்டியன் மூவ்மென்று துணை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியி முடிவில்  44 – வருடம் பி.எப்.எம் சபையின் தலைவராக பணியாற்றிய ஆர்ச் பிஷப் மோசஸ் சுவாமிதாசின் சேவைக்காக பாராட்டு விழாவும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page