பூத்துறையில் 14 கோடி 69 லட்சம் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலோர கிராமங்களில் கடல் சீற்றத்தால் பல பகுதிகளில் கடுமையான பாதிப்புக்கள் ஆண்டுதோறும் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றத்தினால் பூத்துறை கடற்கரை கிராமத்தில் பல வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது. ஆகவே கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் மக்களை பாதுகாக்கவும் கடல் சீற்றத்தில் இருந்து பூத்துறை கிராமத்தை பாதுகாக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தூண்டில் வளைவுகள், (நேர்க்கல்) அமைத்து தர கேட்டு கடந்த 2016 ம் ஆண்டு முதல் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர், துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் காரணமாக கடந்த 2018 ம் ஆண்டு பூத்துறை பகுதியில் 50 மீட்டர் நீளத்தில், 150 மீட்டர் இடை வெளியில் 7 தூண்டில் வளைவுகள் (நேர்க்கல்) அமைக்க ரூபாய் 14 கோடி 69 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு பின்னர் ஒப்பந்தம் முடிவடைந்து, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதையடுத்து 50 மீட்டர் நீளத்தில் 150 மீட்டர் இடை வெளியில் 7 இடங்களில் தூண்டில் வளைவு (நேர்க்கல்) அமைக்கும் பணிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.ஏல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி, தூத்தூர் ஊராட்சி தலைவர் லைலா, முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் பேபி ஜாண்,
பங்குபணியாளர் ஆன்சல் ஆன்றணி, முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், மீனவரணி மாவட்ட தலைவர் பிரடி கென்னடி, காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் அந்தோணி பிச்சை, மின்னல் ராஜூ, வில்பிரட், மாநில பொதுசெயலாளர் பால்ராஜ், கடலரிப்பு தடுப்பு பிரிவு செயற்பொறியாளர் வசந்தி, உதவி பொறியாளர்கள் சாலமன் சுரேஷ், தாணுமூர்த்தி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.