December 2, 2021 2:59 pm

போலீஸ் மிரட்டியதால் குமரி டாக்டர் தற்கொலை. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, உடல் வாங்க மறுப்பு

கன்னியாகுமரி  மாவட்டத்தில் போலீஸ் மிரட்டியதால் டாக்டர்  ஒருவர் தற்கொலை செய்தார். சமமந்தப்பட்ட  போலீசார் மீது  நடவடிக்கை  எடுக்க  வலியுறுத்தி,  டாக்டர்  உடலை  வாங்க  உறவினர்கள்  மறுத்தனர்.

நாகர்கோவில்  அருகேயுள்ள  பரக்கை இலந்தவிளை என்ற  இடத்தை   சேர்ந்தவர் சிவராமப்பெருமாள்(43). டாக்டரான  இவர் பறக்கை  பகுதியில்  ஆஸ்பத்திரி  நடத்தி  வருகிறார்.  மேலும் தி முக மருத்துவர்  அணியின் துணை அமைப்பாளராக பொறுப்பு  வகிக்கிறார். இவர்  மனைவி  சீதா அகஸ்தீஸ்வரம் அரசு  ஆரம்ப சுகாதார  நிலைய  டாக்டராக உள்ளார். இரண்டு  பெண்  குழந்தைகள்  உள்ளனர்.

சிவராமபெருமாள்  நேற்று  வழக்கம் போல்  தனது  ஆஸ்பத்திரி சென்றவர,  தனது  ஓய்வு  அறையில் விஷம்  குடித்து   தற்கொலை  செய்து கொண்டார். இது  தொடர்பாக  சுசீந்திரம்  பொலிஸாருக்கு  தகவல்  தெரிவிக்கப்பட்டது. சம்பவ  இடம்  வந்த  போலீசார் அவர்  உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம்  மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்கு  அனுப்பி  வைத்தனர்.

தொடர்ந்து  இது  தொடர்பாக  விசாரணை  நடை  பெற்றது.  ஆனால் டாக்டர்  தற்கொலை  செய்த சம்பவம் உடனடியாக  தீ போல  பரவியது, மட்டுமின்றி, அவரது  தற்கொலைக்கு  காரணம் போலீஸ் டி எஸ் பி பாஸ்கர் என்பவர்  என,   சமூக  வலைத்தளங்களில்  செய்தி  பரவியது. மட்டுமின்றி, தற்கொலை  செய்து கொண்ட  டாகடர்  கைப்பட எழுதியதாக கூறப்பட்ட  கடிதம் ஒன்றும்   சமூக வலைத்தளங்களில்  வைரல் ஆனது. இதனால்  பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

இதையடுத்து   சுறு  சுறுப்பான  போலீஸ்  துறை  தீவிரமமாக விசாரித்தது,. விசாரணையில் இறந்த டாக்டருக்கும்,  இலந்தவிளை பகுதியை  சேர்ந்த விஜய ஆனந்த் என்பவருக்கும் முன்  விரோதம்  இருந்ததாகவும், இந்த  விவகாரத்தில்  டி எஸ் பி பாஸ்கரன் என்பவர் டாக்டர் சிவராம பெருமாளை போனில்  தொடர்பு  கொண்டு  தகாத  வார்த்தைகளால்  திட்டியதாகவும் தெரிய  வருகிறது. இந்த  சம்பவத்தால்  டாக்டர்  மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.

மேலும்   கடந்த சில நாட்களுக்கு  முன்பு  டாக்டர்  சிவராமப்பெருமாள்  தனது குடும்பத்துடன் காரில்  செல்லும் போது, தடுத்து  நிறுத்திய டி எஸ் பி பாஸ்கர், டாக்டர்   மற்றும் அவரது   மனைவியை தகாத  வார்தைகளால்  திட்டியதாக தெரிகிறது. இதனால்  வாழ்கையில்   வெறுப்புற்று  டாக்டர் தற்கொலை  செய்ததாக  டாக்டரின் உறவினர்கள்  தெரிவித்தனர்.

மேலும்  சிவராமப்பெருமாள் எழுதிய கடிதத்திலும், எனது  மரணத்திற்கு  பொறுப்பு   ஏற்க  வேண்டியவர்கள் டி எஸ் பி  பாஸ்கரன்  மற்றும் விஜய  ஆனந்த் என  குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து  டாக்டர்  மனைவி  சீதா கொடுத்த  புகாரின்  பேரில்  போலீசார்  விசாரித்து  வருகின்றனர்.

இதற்கிடையில்  இன்று  டாக்டர்  உடல்  ஆசாரிபள்ளம்  ஆஸ்பத்திரியில் பிரேத  பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால்  தற்கொலைக்கு  காரணமான நபர்கள்  மீது  நடவடிக்கை   எடுத்தால்   மட்டுமே உடலை  வாங்குவதாக  உறவினர்கள் கூறினார்கள். இதனால்  மருத்துவமனையில்  பரபரப்பு  ஏற்பட்டது.

தொடர்ந்து  திமுக எம் எல் -கள்   சுரேஷ்ராஜன், ஆஸ்டின்  ஆகியோர் குமரி  மாவட்ட காவல்  கண்காணிப்பாளரை சந்தித்து  நடவடிக்கை  எடுக்க  வலியுறுத்தினார். அப்போது, விசாரணை  நடத்த இரண்டு  அதிகாரிகளை  நியமித்துள்ளதாகவும்,  விசாரணைக்கு  பின்  உரிய நடவடிக்கை   எடுக்கப்படும்  எனவும்  எஸ் பி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  டாக்டர்  உடலை உறவினர்கள்  பெற்று  கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page